Jan 7, 2009

11th Jan 2009 ; Coimbatore Festival - Film Fest

கோயம்புத்தூர் விழாவின்

திரைப்பட விழா

11 ஜனவரி 2009

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

காலை 9 மணி - 10 மணி

குறும்பட போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 குறும்படங்கள் திரையிடல்.


10 மணி :

முழுவதும் கோவையில் தயாரிக்கப்பட்ட பட்சி ராஜா ஸ்டுடியோவின்

மலைக்கள்ளன் இயக்கம் : எஸ்.எம்.  ஸ்ரீராமுலு நாயிடு
வருடம் : 1954
ஓடும் நேரம் : 2 மணி 54 நிமிடங்கள்

மதிய உணவு பார்வையாளர் அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்கு மேல் :


பேசாமொழி

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலம் பற்றிய ஆவணப்படம்


பேசாமொழி ஆவணப்படம் பற்றி http://bsubra.wordpress.com/ இணையதள பதிவை கீழே காணலாம் :

தமிழின் 30 ஆண்டு சினிமா சரித்திரமே காணாமல் போயிருக்கிறது என்கிறது “பேசாமொழி’ ஆவணப்படம்.இரண்டாண்டு கடும் முயற்சிக்குப் பிறகு இந்த ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. தயாரித்தவர் ம.செந்தமிழன். இந்த ஆவணப் படம் குறித்து அவர் கருத்துகள் இவை.


1897-ல் தென்னிந்தியாவிலேயே முதன் முறையாகச் சென்னை விக்டோரியா ஹாலில் சினிமா திரையிடப்பட்டது. அதற்கு 6-7 மாதங்களுக்கு முன்புதான் மும்பையில் இந்தியாவின் முதல் திரையிடல் நடைபெற்றது. 

1905- ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முறையாகப் படங்களைத் திரையிட ஆரம்பித்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட். ரயில்வே பொறியாளரான அவர், படத் தயாரிப்புக்கு முன்பே “லைஃப் ஆஃப் ஜீஸஸ் கிரைஸ்ட்’ என்ற படத்தை வெளியிட்டார். 

தொடர்ந்து லூமி சகோதரர்கள் தயாரித்த “ரயிலின் வருகை’ (ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.) உள்ளிட்ட துண்டுப் படங்களைத் தமிழகம் முழுதும் சுற்றித் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். இவர் தயாரித்த படங்களும் சேர்த்து, மொத்தம் 136 திரைப்படங்கள் இங்குத் தயாரிக்கப்பட்டதாகக் குறிப்புகள் காணப்படுகின்றன.
சாமிக்கண்ணு வின்சென்ட் போல நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக மருதமுத்து மூப்பனார். அவர் இங்கிலாந்து சென்று இளவரசரின் திருமணத்தைப் படம் பிடித்து வந்து இங்குத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். 1916-ல் “கீசகவதம்’ என்ற படத்தை நடராஜ முதலியார் உருவாக்கியிருக்கிறார். 

இவர்கள் எடுத்தப் படங்களோ, அல்லது இவர்களைப் பற்றிய விவரங்களோகூட யாருக்கும் தெரியவில்லை. திரைத்துறை சம்பந்தமாகப் படிப்பவர்களுக்குக்கூட இவர்களைப் பற்றி பாடம் நடத்தப்படுவதில்லை. நேராக கிரிபித், ஹிச்காக், பெலனி என்றுதான் பாடம் நடத்துகிறார்கள். மருதமுத்து மூப்பனாரின் புகைப்படம்கூட காணக் கிடைக்காததுதான் வேதனை.

பேசும் படம் வந்த பின்புதான் அது அந்த மொழியின் திரைப்படம் என்ற கருத்து நிலவுகிறது. மற்ற மொழிகளில் அப்படியில்லை. அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்டில் பேசா மொழி படத்திலிருந்தே அவர்களின் திரைப்பட வரலாற்றைப் பார்க்கிறார்கள். மற்றெல்லா மொழிகளிலும் அப்படித்தான். அவர்களின் மக்கள் தயாரித்த அவர்களின் மக்கள் நடித்த அவர்கள் பகுதியில் எடுக்கப்பட்ட எல்லாப் படங்களும் அவர்களின் மொழிப்படம்தான். இங்கே ஆந்திரத்திலும் கேரளத்திலும்கூட அவர்களின் பேசா மொழிப் படங்களின் ஆவணங்கள் காணக் கிடைக்கின்றன. இங்கே விஸ்காம் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பேசும் படங்கள் வந்தபின்புதான் தமிழ் சினிமாவின் சரித்திரம் தொடங்கியதாகப் பாடம் நடத்துகிறார்கள். பேசாமொழிப் படங்கள் நம் படங்கள் இல்லை என்ற இந்தப் போக்கும் அவற்றை இழக்க ஒரு காரணமாகிவிட்டது. இந்த ஆவணப் படத்தில் பாமரன் சொல்லுவது போல, தமிழர்களுக்கு வரலாறு இருக்கிறது. ஆனால் வரலாற்று பதிவுகளைப் பாதுகாக்கும் பழக்கம்தான் இல்லை.

நன்றி : http://bsubra.wordpress.com/2007/11/18/tamil-cinema-history-pesamozhi-documentary-on-movies/


 தியடோர் பாஸ்கரன்
சிறப்புரை

தியடோர் பாஸ்கரன் சினிமா வரலாற்றாளர், சினிமா பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியிருப்பவர். இயற்கை, சுற்றுச் சூழல் ஆர்வலர். இது பற்றியும் புத்தகங்களும் , பதிரிகைகளில் கட்டுரைகளும்  தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதி வருபவர். தாராபுரத்தில் பிறந்த பாஸ்கரன் , இந்திய தபால் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது பங்களுரில் வசிக்கிறார்.

சினிமாபற்றிய இவரது தமிழ் புத்தகங்கள்: 1. சித்திரம் பேசுதடி (காலச்சுவடு பதிப்பகம் ) 2. எம் தமிழர் செய்த படம் (உயிர்மெய் பதிப்பகம்) , 3. தமிழ் சினிமாவின் முகங்கள் (கண்மணி பதிப்பகம்). 4. மீதி வெள்ளித்திரையில் (அச்சில்) 

S.Theodore Baskaran’s  book The Message Bearers (Cre-A, 1981) is a standard reference on early South Indian cinema and theatre. His other book The Eye of the Serpent: An Introduction to Tamil Cinema (East West, 1996) won the Golden Lotus award from the President of India.  His next book  History Through the Lense (Orient Blackswan) on South Indian cinema  is due in two months. He has written on cinema in journals such as Seagull Theatre Quarterly, EPW, Journal of the International Institute ( Univ. Of Michigan) and Deep Focus. He was a member of the National Jury for film awards in 2003. He was Hughes Visiting Scholar in the University of Michigan in 2001. He writes both in Tamil and in English.

No comments: